கேரளாவில் கடந்த மே மாதம் 29-ம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ம் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால், மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி உள்ளன. டெல்லியில் நேற்று மாலையில் நடந்த, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கேரளாவுக்கு புறப்பட்டார். அவர், மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிடுகிறார். அவருடன் மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகள் உடன் செல்வார்கள் என தெரிகிறது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் ஆய்வுப் பணிகளை தொடங்கினார் பிரதமர் மோடி
Popular Categories



