அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புபடையினர் கேரளா விரைந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில மக்களுக்கு உதவிசெய்யும் வகையில் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் நிவாரண பொருட்களுடன் கேரளாவிற்கு புறப்பட்டுள்ளனர். மேலும் தூத்துக்குடி துறைமுக உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள உணவு மற்றும் நிவாரண பொருட்களை கப்பல் மூலம் கொச்சி துறைமுகத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர்.




