கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மாளவிகா மோஹனன் நடிக்கவுள்ளாராம்.
காலா படத்தை அடுத்து ரஜினிகாந்த் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இப்படத்தில் ரஜினிகாந்துடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
தற்போது மலையாள நடிகை மாளவிகா மோஹனனும் இவர்களுடன் இணைந்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே இப்படத்தில் சிம்ரன் இடம் பெற்றிருந்தாலும் மாளவிகாதான் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகை மாளவிகா மோஹனன் 2013-ஆம் ஆண்டு பட்டம் போலே என்ற மலையாள படத்தில் அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு புகழ்பெற்ற இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய ‘பியாண்ட் தி க்ளவுட்ஸ்’ இந்தி படத்தில் நடித்தார் . மாளவிகா மோஹனன் ரஜினிகாந்த் படத்தில் இணைந்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன்பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடும் என்று தெரிகிறது.




