“பாக். ராணுவ பொம்மையாக இம்ரான்கான் இருப்பார்” – இம்ரானின் முன்னாள் மனைவி பேட்டி

உலகம் சற்றுமுன்

03 July31 Imran Kans wife - 2026பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி 115 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. எனினும், பெரும்பான்மையை பெற தேவையான எம்.பிக்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இம்ரான் கானின் முன்னாள் மனைவியும், பத்திரிகையாளருமான ரேஹம் கான், இந்திய நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என்று ஏற்கனவே தனக்கு தெரியும் எனவும் தேர்தல் முறையாகவும், நியாயமாகவும் நடந்திருந்தால் இம்ரான் வெற்றி பெற்றிருக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தால் ஆட்டி வைக்கப்படும் தலையாட்டி பொம்மையாகத்தான் இம்ரான் கான் இருப்பார் என்றும், ராணுவ சொல்படிதான் இம்ரான் கான் நடந்தாக வேண்டும் எனவும் ரேஹம் கான் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.