மறு அறிவிப்பு வரும் வரை.. கோவில்பட்டியில் நின்று செல்லும் அந்தியோதயா !

தமிழகம்
anthiyoothaya - 2026

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அந்தியோதயா விரைவு ரயில் நின்று செல்லும் என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே வாரியம் தாம்பரம் – நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில்களுக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சோதனை அடிப்படையில் 6 மாதங்கள் நின்று செல்வதற்காக மார்ச் 8 ஆம் தேதி முதல் அனுமதி வழங்கியிருந்தது.

சோதனை அடிப்படையில் கோவில்பட்டியில் ரயில்கள் நின்று செல்ல அனுமதிக்கப் பட்ட காலம் முடியும் தருவாயில் உள்ளது. மறுஅறிவிப்பு வரும் வரை இந்த ரயில்கள் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

வண்டி எண். 16191 தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் 10.26 மணிக்கு கோவில்பட்டிக்கு வரும். கோவில்பட்டியில் இருந்து 10.28 மணிக்கு புறப்படும். வண்டி எண். 16192 நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் கோவில்பட்டிக்கு 18.10 மணிக்கு வந்து சேரும். கோவில்பட்டியில் இருந்து 18.12 மணிக்கு புறப்படும் என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.