கண்ணயர்ந்த ஓட்டுநர்! பள்ளத்தில் விழுந்த கார்! 4 பேர் உயிரிழந்த பரிதாபம்!

Published:

car - 2026

விழுப்புரம் மற்றும் அரியலூரில் இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அம்மாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை இவரும் இவரது குடும்பமும் தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதற்காக அவர்களை சந்திக்க அதிகாலை 6 மணி அளவில் கோவிலை நோக்கி சென்றுள்ளனர்.

வாடகைக்கு வாகனம் எடுத்து அதில் ஏழுமலை மற்றும் அவரின் உறவினர்களான சித்ரா ,பாலாஜி ஜெயக்கொடி, சாந்தி ஆகிய 5 நேரம் காரில் பயணம் செய்துள்ளனர். ஈரோடு நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கும் போது கார் ஓட்டுநர் தூக்க நிலைக்குச் சென்றுள்ளார்.

அப்போது கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் அருகில் இருந்த 15 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் ஏழுமலை சித்ரா ,பாலாஜி ,ஜெயக்கொடி ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்றும் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஓட்டுநர் மற்றும் சாந்தி ஆகிய இருவர்களை அருகிலிருந்தவர்கள் உடனே மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img