கள்ளக் காதலை கண்டித்த கணவனை டிராக்டர் ஏற்றி கொன்ற காதலன்!

Published:

karur - 2026

கரூர் மாவட்டத்தில் கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்த பெண்ணின் கணவனை டிராக்டர் ஏற்றிக் கொலை செய்த நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள பரமத்தி எனும் ஊரில் மனோகரன் சித்ரா தம்பதிகள் வசித்து வந்தனர். இத்தம்பதிகளுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார்.

சித்ராவுக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்ற இளைஞருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த காதல் விவகாரம் சித்ராவின் கணவர் மனோகருக்கு தெரியவர தன் மனைவியைக் கண்டித்துள்ளார்.

karur 1 - 2026

இதையறிந்த சுதாகர் கோபத்தில் டிராக்டரில் சென்று டூவீலரில் வந்துகொண்டிருந்த மனோகரன் மீது மோதியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த மனோகரன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து தலைமறைவான சுதாகரையும் சித்ராவையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img