பிறந்து 2 நாளான குழந்தை கழுத்தை நெறித்துக் கொலை! தாய் செய்த கொடூரம்!

Published:

baby 4 - 2026

திருவண்ணாமலை மாவட்டம் சேவூர் பகுதியில் வசித்து வருபவர் குமார். இவரது மனைவி சோலையம்மாள். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளனர். சோலையம்மாள் மீண்டும் 5வது முறையாக கர்ப்பமாகியுள்ளார்.

அவருக்கு கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு ஆரணி அரசு பொது மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து இரண்டு நாள் கழித்து சோலையம்மாளை குழந்தையுடன் காணவில்லை. எங்குபோனார் என்ற விவரங்கள் ஏதும் தெரியவில்லை.

குழந்தையுடன் தாய் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகிகள் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் சோலையம்மாவை தேடும் பணி தீவிரமாக இருந்தது. .

lovers 1 - 2026

சோலையம்மாள் சென்னையில் இருப்பதை அறிந்து கொண்ட காவல்துறையினர் அவரை தேடி கண்டுபிடித்தனர். பின்னர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்பொழுது சோலையம்மாள், தனக்கு குமாரின் சகோதரரான பாபு என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாகவும், தனது 5வது குழந்தைக்கு அப்பா பாபு என்றும் கூறினார். பிறந்த குழந்தை தன் தந்தையை போல ஜாடையிலில் இருந்துள்ளது. அதனை கண்ட சோலையம்மாள் பயந்துபோய் இது குறித்து பாபுவிடம் கூறியுள்ளார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

உடனே சோலையம்மா மற்றும் பாபு இருவரும் இணைந்து குழந்தையை கொன்று விட முடிவு செய்துள்ளனர். அதனால் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய சோலையம்மாள் சேவூர் கிராமத்தில் உள்ள ஒரு முட்புதரில் குழந்தையின் கழுத்தை நெரித்து, மூச்சு திணறடித்து கொலை செய்து அங்கேயே புதைத்ததாக கூறியுள்ளார்

காவல்துறையினர் அவர்கள் கூறிய இடத்திற்கு சென்று புதைந்திருந்த குழந்தையின் சடலத்தை மீட்டு எடுத்தனர். பின்னர் குழந்தையை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். பெற்றத்தாயே பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img