கவனம் மக்களே! தீபாவளி பண்டிகை! கூப்பன் மோசடி!

Published:

gas stove - 2026

தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் வர உள்ளதால் தீபாவளி பரிசு, சலுகை என சிலர் மோசடிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இவ்வாறான மோசடி ஒன்றுதான் புதுக்கோட்டையில் வசித்து வரும் தம்பதியினரிடம் நடந்துள்ளது.

சோப்பு வியாபாரிகள் என தங்களை அறிமுகம் செய்துக்கொண்ட இருவர், சோப்பு வாங்கினால் ஒரு கூப்பன் கொடுக்கப்படும் அந்த கூப்பனில் என்ன பரிசு பொருள் உள்ளதோ அது உங்களுக்கு கொடுக்கப்படும் என தம்பதியினரிடம் கூறியுள்ளனர்.

இதை நம்பி சோப்பு வாங்கி கூப்பன் பெற்ற தம்பதியினருக்கு கூப்பனில் கேஸ் ஸ்டவ் இருந்தது. உடனே அதை இருவர் பரிசாக வழங்கினர். அதனை தொடர்ந்து மேலும் ஒரு கூப்பன் இருப்பதாக கூறியுள்ளனர். அதில் மோட்டார் பைக் இருந்துள்ளது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த தம்பதியினர் கேஸ் ஸ்டவ் போல மோட்டார் பைக்கும் கிடைக்கும் என மகிழ்ச்சி அடைந்தனர்.

bike - 2026

ஆனால் அந்த 2 பேரும் மோட்டார் பைக் வேண்டும் என்றால் ரூ.10,000 வரி செலுத்த வேண்டும் என கூற, அந்த தம்பதியினரும் காசை கொடுத்துள்ளனர்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!
car - 2026

மறுநாள் பைக் கொண்டுவருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு இருவரும் சென்றுள்ளனர். சொன்னது போல மறுநாள் இருவரும் வந்து இதேபோல் வேறு ஒரு நபருக்கு கார் பரிசாக விழுந்தது. ஆனால் வரி கட்ட அவர்களிடம் பணம் இல்லை. எனவே நீங்கள் காரை வாங்கிக்கொள்கிறீர்களா என கேட்டுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img