படிச்ச முதல்வர்ன்னா இதுக்குள்ள பட்டுன்னு மீட்ருப்பாங்க! மீராமிதுன்!

தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
meera mithun 4 - 2026

தீபாவளி பண்டிகையை எல்லாம் விட்டுவிட்டு தமிழகம் முழுவதுமே சிறுவன் சுர்ஜித்துக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறது. தண்ணீர் ஆகாரம் எதுவுமில்லாமல் நூறடி ஆழத்தில் தவித்து வரும் சிறுவனை எப்படியாவது காப்பாற்று என்று தமிழகம் முழுவதும் சிறுவர்களும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தீயணைப்புத் துறையினர், மீட்புக் குழுவினர், தகவல் அறிந்த நாள் முதலே அதே இடத்தில் கண்கலங்கி நிற்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்று எந்த அரசியலும் இல்லாமல் சிறுவனைக் காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் அனைவரும் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடினமாக பாறைப் பகுதியாக இருப்பதால், குழி தோண்டுவது பெரும் சவாலாகவே மீட்பு குழுவினருக்கு உள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை மீரா மிதுன், குழந்தை மீட்புக் குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.