தாலிக்கயிறை யாருக்கு கட்ட.. குழப்பத்தில் தூக்கு கயிற்றை மாட்டிக் கொண்ட இளைஞர்!

கிரைம் நியூஸ் தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
marrige - 2026

நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்தார்.. அந்த பெண்ணும் மணிகண்டனை உயிருக்கு உயிராக விரும்பினார். ஒருநாள் இவர்களுக்குள் திடீரென சண்டை வந்துவிட்டது. அதனால், கருத்து வேறுபாட்டில் பிரிந்துவிட்டனர்.

இதனிடையே மணிகண்டனுக்கு வீட்டில் பெற்றோர் ஒரு பெண்ணை பார்த்து நிச்சயம் செய்தனர். நிச்சயம் செய்த பெண்ணை மணிகண்டனுக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. அதனால், அவருடன் பல இடங்களுக்கு சென்று ஊர் சுற்றி மகிழ்ந்தார்.

manikan - 2026

இந்நிலையில் காதலி மணிகண்டனிடம் வந்து தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். “உன்னை விட்டு விட்டு என்னால் இருக்க முடியவில்லை.. ஒன்றாக வாழலாம் வா” என்று சொல்லவும், மணிகண்டனுக்கு பழைய காதல் திரும்பவும் வந்துவிட்டது.

அதனால், காதலியையே கல்யாணம் செய்து கொள்வதாக சொன்னார். இந்த விஷயத்தை தன் பெற்றோரிடமும் சொன்னார் மணிகண்டன்..

வீட்டில் பெரிய பூகம்பமே வெடித்துவிட்டது. தாங்கள் பார்த்த பெண்ணைதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று வீட்டில் கட்டாயப்படுத்தினர். இதனால் மணிகண்டன் மனமுடைந்துவிட்டார்..

SUSIED MAN - 2026

காதலியை மணப்பதா? வீட்டில் பார்த்த பெண்ணை மணப்பதா என்று குழம்பினார்..
இறுதியில், வேறுவழியின்றி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மணிகண்டன் தூக்கில் தொங்குவதை, அக்கம்பக்கத்தினர் பார்த்து உடனடியாக பக்கத்தில் இருந்த ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.