இரவில் கடைக்கு போன 16 வயது மகள் வெகுநேரம் வீடு வரவில்லை! பதறிய தாய்…பின்னர் அறிந்த செய்தி…!

கிரைம் நியூஸ் தமிழகம் பொது தகவல்கள்
vankodumai 1 - 2026

சென்னை அடுத்த ஓட்டேரி குன்னூர் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் புஷ்பவல்லி (47). கணவரை இழந்த இவர், அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார்.

இவரது மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மகள் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகமடைந்த புஷ்பவல்லி தனது வீட்டின் அருகே தேடிப் பார்த்தார். ஆனால், கிடைக்கவில்லை. வெகுநேரம் கழித்து வந்த மகளிடம் விசாரித்த போது, அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி செல்வம் (32) என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.

தனது மகளுக்கு நிகழ்ந்த கொடுமை குறித்து மாணவியின் தாய் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து காவல்துறையினர் செல்வத்தை பிடித்து விசாரணை நடத்தியப்போது அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் செல்வத்தை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.