நள்ளிரவில் ஒவ்வொரு வீடாக படுக்கையறை ஜன்னலில்….மர்ம நபர் செய்யும் செயலால் கோவை மக்கள் பீதி!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் கோவை பொது தகவல்கள்
bed room 2 - 2026

நள்ளிரவில் ஊர் அடங்கிய பிறகு ஒரு நபர் பைக்கில் மக்கள் குடியிருப்புக்கு வருகிறார். செருப்பையும் ஜெர்கினையும் பைக்கிலேயே கழற்றி வைத்து விட்டு அக்கம் பக்கம் சுற்றிப்பார்த்து விட்டு, மெதுவாக சுவர் ஏறி குதிக்கிறார்.

அந்த நபர் நேராக வீட்டின் பெட்ரூம் ஜன்னல் அருகே செல்கிறார். பிறகு, ஜன்னலுக்குள் எட்டிப் பார்க்கிறார். இதையடுத்து, யாராவது பார்க்கிறார்களா என்று ஒரு நோட்டம் விட்டுவிட்டு, அந்த வீட்டைப் பார்த்தபடியே பைக்கில் நகர்கிறார்.

bedroom 1 - 2026

இப்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அந்த நபர், தடாகம் சாலை இடையர்பாளையத்தில் உள்ள மருதம் நகர், பாரதி காலனி ஆகிய பகுதிகளில் உள்ள மூன்று வீடுகளின் பெட்ரூம் ஜன்னல்களை நோட்டம் விட்டுள்ளார்.

மேலும், பூம்புகார் நகர், குறிஞ்சி நகர், முல்லை நகர், கவுண்டம்பாளையம் போன்ற பகுதிகளில் அந்த நபர் சுற்றி வருகிறார். ‘இதுகுறித்த சிசிடிவி வீடியோக்களைப் பார்க்கும்போதே மனது பதைபதைக்கிறது’ என்கின்றனர் அந்தப் பகுதி மக்கள்.

bedroom - 2026

வீட்டின் பெட்ரூம் ஜன்னல்களை மட்டுமே குறிவைத்துப் பார்த்து சென்று கொண்டிருக்கிறான். அவன் எந்தப் பொருளையும் திருடவில்லை. இந்த விஷயமே எங்களுக்குப் பயத்தை அளிக்கிறது. அவனின் நோக்கம் என்னவென்றே தெரியவில்லை.

ஏற்கெனவே, கடந்த காலங்களில் இதே பகுதியில், கணவன் மனைவி பிரைவசியை எட்டிப் பார்த்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவனும் அந்த நபரைப் போலவே மனநலம் பாதித்தவனாக இருப்பானோ எனத் தோன்றுகிறது. இதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்” என்றனர்.

bedroom 2 - 2026

துடியலூர் காவல்துறையினர் ,அந்தப் பகுதி மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அங்கு இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளோம். கடந்த மூன்று நாள்களாக அந்த நபர் எங்கும் வரவில்லை.

அவன் ஓட்டி வரும் பைக்கின் நம்பரை வைத்து விசாரணை நடத்திவருகிறோம். விரைவில் அவனைப் பிடித்துவிடுவோம்” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.