ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பெண்! கை விரல் துண்டான சோகம்!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சென்னை
thundu viral - 2026

சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவருக்கு சரண்யா என்ற மனைவியும் 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். வினோத் பொங்கல் பண்டிகைக்காக மயிலாடுதுறையில் உள்ள தாய் வீட்டுக்கு கடந்த 13 ஆம் தேதி சோழன் விரைவு ரயிலில் சென்றுள்ளார்.

கடலூர் அடுத்த ஆலப்பாக்கத்தில் ரயில் வந்தபோது, ரயிலின் ஜன்னல் கதவு உடைந்து விழுந்துள்ளது. அப்போது ஜன்னல் பக்கம் கையை வைத்திருந்த சரண்யாவின் விரல் துண்டாகியுள்ளது.

இதனால் வலியில் சரண்யா அலறித்துடிக்க அங்கிருந்தவர்கள் துணியால் விரலை கட்டியுள்ளனர். அதற்கு டிடிஆருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பின்னர் அவரிடம் முதலுதவி பெட்டியை கேட்டுள்ளனர். ஆனால் அங்கு முதலுதவி பெட்டி இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து மயிலாடுதுறை ரயில் நிலையம் வந்ததும் சரண்யா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.