பெண்ணைக் காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை! சாலையில் வீசி சென்ற கொடூரம்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் தமிழகம் திருச்சி பொது தகவல்கள்
vankodumai - 2026

திருச்சி நெடுஞ்சாலையோரம் பெண் ஒருவர் விழுந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

அங்கு சென்று பார்க்கும் போது அந்தப் பெண் அரை மயக்கத்தில் இருந்துள்ளார். மேலும், அவரது உடலில் காயங்கள் இருந்துள்ளன. அவரை மீட்டு அவசர ஊர்தியின் மூலமாக திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

palathkaram - 2026

அப்போது அப்பெண் கடத்தப்பட்டு நான்கு பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு ஓடும் காரில் இருந்து தூக்கி வீசப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்மணி தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது தொடர்பாக காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இக்கொடூரத்தை நிகழ்த்தியது யார்? என அந்த சாலைகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை அலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.