தெலங்கானா ஆளுநர் தமிழிசையின் தனித்துவம்: பெண் விவசாயிக்கு உடனடி உதவி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
tamilisai soundarrajan - 2026

தெலங்கானா ஆளுநர் தமிழிசையின் தனித்துவம்: பெண் விவசாயிக்கு உடனடி உதவி; பட்டாதாரருக்கு பாஸ் புத்தகம் வினியோகம்!

தெலங்காணா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தன் பார்வைக்கு வந்த மக்கள் பிரச்னைகளை நேராக தீர்த்து வைத்து தன் தனித்தன்மையை நிரூபித்து வருகிறார். அண்மையில் நடந்த ஒரு சம்பவமே இதற்குச் சான்று.

நிஜாமாபாத் மாவட்டம் போதன் மண்டலம் பெண்டகலான் கிராமம் பூலட்சுமி கேம்ப்பைச் சேர்ந்த சீதாராமம்மாவின் கணவர் ராமிரெட்டி மரணமடைந்ததால் அவர் பெயரில் இருந்த 4.30 ஏக்கர் நிலத்தை ‘விலாசத்’ பரம்மரை உரிமை செய்ய வேண்டுமென்று தாசில்தாருக்கு விண்ணப்பித்தார்.

சர்வே நம்பரில் விஸ்தீரணம் அதிகரித்துள்ளது என்றும் சரி செய்யும் வரை பாஸ் புத்தகம் கொடுக்க இயலாது என்றும் ஒரு வருடம் காத்திருக்கும்படியும் தாசில்தார் கூறினர்.

ஆர்டிஓ விடம் சென்றபோது, “உன் ஒருத்தர் வேலையை மட்டுமே செய்ய வேண்டுமா? எங்களுக்கு வேற நிறைய வேலை இருக்கு” என்று எரிந்து விழுந்தார்.

கலெக்டரேட்டில் நடக்கும் பிரஜாவாணியில் கலெக்டரிடம் மனு அளித்தார் சீதாராமம்மா. இவ்வாறு ஐந்து மாதங்களாக ஒவ்வொரு அலுவலகமாக அலைந்து வருகிறார்.

சோர்ந்துபோன சீதாராமம்மாவின் மகன் வெங்கடேஸ்வரரெட்டி கவர்னர் தமிழிசைக்கு போன் செய்தார். கவர்னர், ராஜ்பவன் காரியதரிசி சுரேந்திரமோகனுக்கு ஆணையிட்டார். அவர் மாவட்ட கலெக்டரோடு பேசி சீதாராமம்மாவை வரவழைத்தார்.

கலெக்டர் தன் விரல் முத்திரையோடு ம்யூடேஷன் பத்திரங்களில் கையெழுத்து செய்து அப்போதைக்கு அப்போதே பாஸ் புத்தகம் ஜெராக்ஸ் எடுத்து விவசாயிக்கு அளித்தார். எல்லாம் கிடுகிடுவென்று நடந்தேறின. மூன்று நாட்களிலேயே வேலை முடிந்தது.

இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஆளுநர் தமிழிசை ப்ரஜா தர்பார் நடத்தி வருகிறார். மக்கள் மனதில் இடம் பிடித்தும் வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.