கொரோனா: பைக்கிலேயே மருத்துவமனைக்கு சென்ற நபர்!

corona way

தகவல் கொடுத்து 12 மணி நேரத்திற்கு பிறகும் ஆம்புலன்ஸ் வராததால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து மருத்துவமனையை அடைந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி நரசாத் தெருவினை சேர்ந்த 59 வயது முதியவருக்கு கடந்த புதன்கிழமை மதியம் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அந்த நபர் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்து விவரத்தைக் கூறி தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் படி கூறியுள்ளார். ஆனால் அவர் போன் செய்த சமயம் அங்கு ஆம்புலன்ஸ் இல்லை என்று சொல்லப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து பல முறை 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர்களோ ஆம்புலன்ஸ் அனைத்தும் பிற நோயாளிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலையே மறுபடி மறுபடி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அன்று வீட்டில் நள்ளிரவு வரை ஆம்புலன்ஸூக்காக காத்திருந்த அவர், அதன் பின்னர் வேறு வழியில்லாமல் தனது மகனின் உதவியுடன் இரு சக்கர வாகனத்தில் திருப்பூர் அரசு மருத்துவமனையை அடைந்துள்ளார்.

இது குறித்து அவினாசிப் பகுதி சுகாதார ஆய்வாளர் ஒருவர் கூறும் போது ” தகவல் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் முதலில் பிற்பகல் 1.15 மணிக்கு வருவதாக இருந்தது. அதன் பின்னர் அது 4 மணி, 7 மணி, 9 மணி என நீண்டு கொண்டே சென்றது. தகவலறிந்தவுடன் நாங்கள் அவரை வீட்டில் தனிமையிலிருக்க அறிவுறுத்தினோம்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

அவர் வெளியே வராதாபடி அவரது வீட்டுகதவுகளையும் மூடினோம். நாங்கள் சொன்ன எல்லாவற்றுக்கும் அவர் முழு ஒத்துழைப்பு அளித்தார். ஆம்புலன்ஸூக்காக நீண்ட நேரம் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வராததால் அந்த வாய்ப்பை நாங்கள் அவருக்கு வழங்கினோம்.

அவரது 21 வயது மகனும் அவரும் இரு சக்கர வாகனத்தில், கிட்டத்தட்ட18 கிலோ மீட்டர் பயணம் செய்து மருத்துவமனைச் சென்றடைந்தனர். அவரது மகன் தான் வாகனத்தை இயக்கினான். இருவரும் முக கவசம் அணிந்திருந்தனர்.

அவினாசி காவலர்கள் அவர்களை பின் தொடர்ந்து சென்றனர். அதன் பின்னர் அவரது வீட்டை நாங்கள் தனிமைப்படுத்தலுக்கு கொண்டு வந்தோம்.” என்றார். அதன் பின்னர் நடந்த விசாரணையில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சுகாதார பணியாளாராக பணியாற்றி வருவது தெரிய வந்தது.

இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கூறும் போது ” அவர்கள் சென்ற பாதையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்வதற்காக தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories