
மதுரை புறநகர் மாவட்டம் சேடபட்டி ஒன்றியம் பழம்பெரும் உலக புகழ் பெற்ற ஸ்ரீ சதுரகிரி மகாலிங்கம் திருக்கோயில் அடிவாரத்தில் பக்தர்கள் ஓய்வு எடுக்க அரசால் கட்டபட்டுள்ள தங்கும் விடுதி அருகே புதிதாக சிலுவையுடன் சர்ச் கட்டியுள்ளதை உடனே அகற்ற கோரியும்,சர்ச் கட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இந்துமக்கள்கட்சி சார்பாக புகார் அளிக்கப் பட்டது

அதன் அடிப்படையில் 8-8-2020 மதுரை மாவட்டம் சாப்டூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானேன் .
விசாரணையில் ஒரு வழிபாட்டு தலம் கட்ட வேண்டு மென்றால் அரசாங்கம் விதித்துள்ள வழிமுறைகளையும் நெறிமுறைகளும், அனுமதியையும் பெற்று மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்ற வேண்டும். ஆனால் எதையும் பின் பற்றாமல் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு லட்சகணக்கான பக்தர்கள் செல்லும் இடத்தில் இந்துக்கள் மனதை துன்புறுத்தும் விதத்திலும் வருங்காலத்தில் மத மோதலை உண்டாக்கும் வகையிலும் மேற்கண்ட இடத்தில் வேண்டுமென்றே சர்ச் கட்டியுள்ளார்கள்.

ஆகவே அச்சர்ச்சை அகற்ற வேண்டுமென காவல் ஆய்வாளரிடம் என வாதத்தை எடுத்துரைத்தேன்.பிறகு ஆய்வாளர் அவர்கள் இதுசம்பந்தமாக காவல்துறை மேல் அதிகாரிகளிடம் தெரியபடுத்தியும் , அரசு விதித்துள்ள அரசின் விதிமுறைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவு ஆவணங்களையும் மறு விசாரணைக்கு அழைக்கும் பொழுது தாங்கள் கொண்டு வரவேண்டும் என்று நான் கூறிய புகார் மனுவை ஏற்று கொண்டு மனு ரசீதும் வழங்கி இவ்விசயத்தில் முறையாக விசாரணை செய்து சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று காவல் ஆய்வாளர் அவர்கள் உறுதி அளித்துள்ளார்.

என்னுடன் பாரதீய ஜனதா கட்சியின் மதுரை ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளரும் எனது அருமை நண்பருமான வழக்கறிஞர் திரு.முத்துக்குமார்ஜீ அவர்களும் என்னுடன் விசாரணைக்கு ஆஜரானார் என்பதை தெரியப் படுத்திக் கொள்கிறேன்.
- M.சோலைகண்ணன்
இந்து மக்கள் கட்சி (மதுரை மாவட்டத்தலைவர்)