old man - 2026

திருபுவனம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனம் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை அழகப்பன் என்பவர் சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியனிடம் உங்களுடைய சிறுமிக்கு அரசிடமிருந்து கல்வி உதவித்தொகை மற்றும் நிவாரணம் வாங்கித்தருவதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அவர் சிறுமியை என்னுடன் அனுப்புங்கள் சட்டப்பேரவை உறுப்பினரை பார்க்க செல்வதாக கூறி அவருடைய பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து பெற்றோர்களும் அவருடன் அனுப்பி வைத்தனர். சிறுமியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற அவர் அந்த சிறுமியை யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.

பதறிப்போன அந்த சிறுமி உடனே கூச்சலிட்டுள்ளார் பயந்துபோன அந்த 60 வயதான அன்பழகன் உடனடியாக சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பிறகு சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தன்னுடைய தாயிடம் தெரிவித்துள்ளார். அங்கிருந்த உறவினர்கள் அவரிடம் இது குறித்து விசாரித்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ALSO READ:  விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்; மாற்றி அறிவிக்க இந்து முன்னணி கோரிக்கை!

இதையடுத்து உடனடியாக சிறுமியின் தாய் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தாய் அளித்த புகாரின் பேரில் சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்த அன்பழகனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending