தபால் துறையின் மெயில் மோட்டார் சர்வீஸ் துறையில் பணி!

தமிழகம் வேலைவாய்ப்பு
post office 1
post office 1

இந்திய அஞ்சல் துறைக்கு உள்பட்டு செயல்பட்டு வரும் மெயில் மோட்டார் சர்வீஸ் துறையில் காலியாக உள்ள 9 ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது .

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

9 காலியிடங்கள் உள்ளன. Staff Car Drivers என்ற பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

56 வயதிற்குள் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றவராகவும் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வாகன பழுது நீக்கும் பணிகளில் திறன் பெற்றிருக்க வேண்டும்.

மாதம் ரூ.24,500 சம்பளம் வழங்கப்படும். பிரதிநிதித்துவம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 10.09.2021ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை போன்ற விபரங்கள் அறிய https://www.indiapost.gov.in அல்லது https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_17082021_OD_E.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.