திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஓவியக்கண்காட்சி இன்று நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளையொட்டி பாளையங்கோட்டை மிலிட்டரிலைன் அருகேயுள்ள திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு சிறப்பு ஓவியக்கண்காட்சி தொடங்குகிறது. தொடர்ந்து இம் மாதம் 17 ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெற உள்ளது.
சிவராம் கலைக்கூட மாணவர்-மாணவிகள் தாங்கள் வரைந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களை காட்சிப்படுத்த உள்ளனர். இதுதவிர பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



