தமிழகத்தில் சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் இன்றும், நளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை விருதுநகர், தேனி, தென்காசிஆகிய 15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் 16 செ.மீ., மழையும், பேராவூரணி, காட்டுமன்னார்கோவிலில் தலா 6 செ.மீ., மதுக்கூரில் 5 செ.மீ., பட்டுக்கோட்டையில் 4 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






