திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த திருநங்கை அ.மர்லிமா வுக்கு சிறந்த திருநங்கை விருது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவரை சிறப்பிக்கும் வகையில், 2022ஆம் ஆண்டிற்கான, சிறந்த திருநங்கை விருதினை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை அ.மர்லிமா வின் 25 ஆண்டுகால சேவையைப் பாராட்டி, விருதுக்கான 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிழை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குநர், த.ரத்னா, மாநில திட்டக் குழு உறுப்பினர் டாக்டர் நர்தகி நடராஜன்மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





