
சுண்டல்
தேவையான பொருட்கள்:
வேகவைத்த கடலைப்பருப்பு – அரை கப் ஊறவைத்து வேகவைத்த சன்னா (வெள்ளைக் கொண்டைக்கடலை) – கால் கப்
கடுகு, உளுத்தம்பருப்பு, கரம் மசாலாத்தூள், பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல், கேரட் துருவல் – தலா 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, கடலைப்பருப்பு, சன்னா, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு மற்ற பொருள் களையும் சேர்த்துக் கிளறவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம்.




