
பருப்பு உப்புமா
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, அரிசி குருணை – தலா அரை கப்
மிளகு, கடுகு – தலா ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 3 டீஸ்பூன்
பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் – தலா 2
சின்ன வெங்காயம் – 6 (நறுக்கவும்) பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிதளவு
தேங்காய்த் துருவல் – 3 டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை – 2 ஆர்க்கு
தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கடலைப்பருப்பு, துவரம்பருப்பை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து மிளகு சேர்த்து குருணை பதத்தில் பொடிக்கவும். பாத்திரத்தில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, காய்ந்த மிளகாய், வெங்காயம், பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதில் 3 கப் தண்ணீர்விட்டு உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து, கொதிக்கும்போது அரிசி, பருப்பு குருணைகளைச் சேர்த்துக் கிளறி மூடவும். அடுப்பைக் குறைவான தீயில்வைத்து, இடையில் இரண்டு முறை கிளறவும். வெந்ததும் கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும். தேங்காய் சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.




