வள்ளலார் வழியில் வாழ்வு நடத்தியவரும் திருவருட்பாவினைப் பதிப்பிப்பதிலும் வள்ளலார் அவர்களின் வரலாற்றினை விரித்து எழுதியதிலும் பெரும் பங்காற்றிய தவத்திரு ஊரன் அடிகளார் 13.07.2022 நள்ளிரவு தனது இல்லத்தில் காலமானதாகச் செய்தி.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரம் சார்ந்த ஊர் கண்ணனூர் ஆகும். அதனைச் சார்ந்த நரசிங்கமங்கலம் என்னும் ஊரில் தவத்திரு ஊரன் அடிகளார் 1933 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் நாள் பிறந்தவர்.இவர்தம் இயற்பெயர் குப்புசாமி என்பதாகும். ஊரன் அடிகளாரின் தந்தையார் பெயர் இராமசாமிப் பிள்ளை. தாயார் பெயர் நாகரத்தினம் அம்மாள்.1967 இல் துறவு பூண்டவர். 1968 முதல் வடலூரில் வாழ்ந்து வந்தவர். பன்னூலாசிரியர். சிறந்த சொற்பொழிவாளர்.
ராமலிங்கஸ்வாமிகள் ஆரம்பித்த சத்தியஞான சபையில் சுமார் 25 ஆண்டுகள் தலைவராகவும்,துறவியர் சங்கத்தில் துணைத்தலைவர், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் கல்வி அறக்கட்டளை துணைத்தலைவராகவும் இருந்து மிக சிறப்பாக தெய்வீக, சமூக கடமைகளை ஆற்றிவந்துள்ளார்கள்.
அயோத்தியில் ராமர் ஆலயம் மிக பிரம்மாண்டமாக அமைய ஸ்ரீமான் அசோக்சிங்கல் அவர்களுடன் தோளோடு தோள் நின்று தமிழகத்தில் அன்று தனது நிலைபாட்டை உறுதி பட தெரிவித்து பல பொதுக்கூட்டங்களில் வீர முழக்கமிட்ட மஹாத்மா.சைவ ஆதினங்களுடனும்,அனைத்து சாது,சந்யாஸிகளாடனும் மிக நெருக்கமாக இருந்தவர்கள்.காலஞ்சென்ற வன்னிய அடிகளாருடன் மிக நல்லநட்புடன் இருந்தவர்கள்.
அடிகளாரது மறைவு தேசிய, தெய்வீக,சமூக சக்திகளுக்கு தமிழகத்தில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.ஊரன் அடிகளாரின் மறைவு சமய உலகத்திற்கும் வள்ளலார் ஆய்வாளர்களுக்கும் அன்பர்களுக்கும் பேரிழப்பாகும்.