தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என்பதால் தமிழகம் முழுவதும் பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டு தேர்வுகளை நடத்தி கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் பள்ளிகளில் காலாண்டு தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டு தேர்வுகளை நடத்தி கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் தயாரித்து நடத்திய தேர்வின் வினாத்தாள் லீக் ஆனதால் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மேலும் தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவு செய்து செப்டம்பர் இறுதிக்குள் தேர்வு நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது,