1656380441550 - 2026

தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு ..

தமிழகம்

 தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆந்திர கடலோரப் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 9-ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழை நீட்டிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

1656380441550 - 2026

வட தமிழக மாவட்டங்கள், வட தமிழக உள் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதற்கு முன்பு வடகிழக்கு பருவமழை அக்.20-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யக்கூடும் என்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த ஆண்டுகளை விட இவ்வாண்டு அதிக புயல் உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தமிழ்நாடு 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மவ்வட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.