1656380441550 1 - 2026

தமிழ்நாட்டில் தொடரும் மழை..

தமிழகம்
1656380441550 1 - 2026

தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நேற்று அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று காலை அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைத்துள்ளதாகவும், இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 22 ஆம் தேதிவாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அக்டோபர் 23 ஆம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என்றும், பிறகு வடதிசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக 24-ஆம் தேதி வாக்கில் வலுபெறக்கூடும்.

பிறகு 25 ஆம் தேதிவாக்கில் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதனால் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பதூர், வேலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.