தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு தொற்று: சென்னையில் 1205 பேருக்கு தொற்று உறுதி!

Published:

corona virus
corona virus
  • தமிழகத்தில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று 3,680 பேருக்கு உறுதி
  • தமிழகத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது
  • தமிழகத்தில் தற்போது வரை கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46,105

தமிழகத்தில் இன்று 3680 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது. சென்னையில் மட்டும் இன்று 1205 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. 

தமிழகத்தில் இன்று 3680 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டதை அடுத்து, தமிழகத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1205 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதை அடுத்து சென்னையில் மட்டும் இதுவரை கொரோனாவில் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 74,969 ஆக அதிகரித்துள்ளது. 

ஒரே நாளில் 4,163 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை 82,324 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,829ஆக அதிகரித்துள்ளது. 

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர் விவரம்:

districtwise details july a
districtwise details july a

Related articles

Recent articles

spot_img