வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-திரிகோண மலையில் இருந்து கிழக்கு, தென்கிழக்கே சுமார் 340 கி.மீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு, தென்கிழக்கே சுமார் 560 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது இன்று மாலை வரை மேற்கு-வடமேற்கு திசையிலும் அதன் பிறகு மேற்கு-தென்மேற்கு திசையிலும் நகர்ந்து நாளை காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும்.
இதன் காரணமாக,
31.01.2023: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
01.02.2023 அன்று தென் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
02.02.2023: தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.