தமிழகம் புதுவை பிளஸ் 1 பொதுத்தேர்வு துவங்கியது..

images 6 1 - 2026

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது மாணவர்கள் ஆர்வத்துடன் தேர்வு எழுத வந்தனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகியது. ஏப்ரல் 5 -ம் தேதி வரை நடைபெறும் இந்த பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். தனித்தேர்வர்களாக 5 ஆயிரத்து 338 பேர் தேர்வு எழுதுகின்றனர். காலையில் 10 மணிக்கு மாணவர்களுக்கு கேள்வித்தாள் வழங்கிய பின்னர் 10 நிமிடம் அதை படிக்கநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி 10 நிமிடத்திற்கு விடைத்தாள் கொடுத்து அதனை பூர்த்திச் செய்ய கூற வேண்டும். காலை 10 மணி 15 நிமிடத்திற்கு தேர்வுகள் துவக்கப்பட்டு, மதியம் 1 மணி 15 நிமிடம் வரையில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டு பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 60 ஆயிரத்து 908 மாணவர்கள், 4 லட்சத்து 12 ஆயிரத்து 779 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 7 லட்சத்து 73 ஆயிரத்து 688 பேர் இன்று தேர்வு எழுதுகின்றனர். புதுச்சேரியில் 6 ஆயிரத்து 799 மாணவர்கள், 7 ஆயிரத்து 577 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 376 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக 40 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித் தேர்வர்களாக 2 ஆயிரத்து 356 மாணவர்களும், 2 ஆயிரத்து 979 மாணவிகளும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும் என 5 ஆயிரத்து 338 பேர் 135 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். மாற்றுத்திறனாளிகளில் 3 ஆயிரத்து 228 மாணவர்களும், 2 ஆயிரத்து 607 மாணவிகளும் என மொத்தம் 5 ஆயிரத்து 835 பேர் இன்று தேர்வு எழுத உள்ளனர். சிறைவாசிகள் 125 பேர் தேர்வெழுத உள்ளனர்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories