images 68 - 2026

தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர்..

தமிழகம்
images 68 - 2026

கடலில் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 12 பேர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.  அப்போது அங்கு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 பேரையும் கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர்.  

இலங்கை கடற்படையினரால் 12 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதால் புதுக்கோட்டை உள்ளிட்ட மீனவ  கிராமங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘நாங்கள் எல்லை  தாண்டி மீன் பிடிப்பதே கிடையாது. ஆனால் இலங்கை கடற்படையினர் நமது கடல் பகுதியிலேயே வந்து கைது செய்கின்றனர். இதனால் மீன்பிடி தொழிலையே கைவிடும்  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.  இலங்கை கடற்படையினரின் தொடர் நடவடிக்கையை நிறுத்த  மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.