சென்னையில், தீபாவளி பண்டிகையையொட்டி, 64.55 டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரில் தேங்கும் குப்பைகள், மாநகராட்சி பணியாளர்கள் மூலம் ஷிப்ட் முறையில் அகற்றப்பட்டு வருகிறது. சென்னையில், நாளொன்றுக்கு 5,300 டன் குப்பைகள் கையாளப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகை, மாநிலம் முழுவதும் கடந்த நவம்பர் 6ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நேற்று மட்டும், பட்டாசு இல்லாத குப்பைகள் மட்டும் 4,800 டன் குப்பைகள் சேகரம் செய்யப்பட்டுள்ளன. தீபாவளி காரணமாக, பெரும்பாலானோர் வெளியூர் சென்று விட்டதே, பட்டாசு இல்லாத குப்பைகள் அளவு குறைந்ததற்கு காரணம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Popular Categories




