spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeதமிழகம்திராவிட கட்டப்பஞ்சாயத்து நீதிபதிகள் தியாகு, கொளத்தூர் மணி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திராவிட கட்டப்பஞ்சாயத்து நீதிபதிகள் தியாகு, கொளத்தூர் மணி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

- Advertisement -
Kausalya 1

கொளத்தூர் மணி, தியாகு “திராவிட கட்ட பஞ்சாயத்து நீதிபதிகள்” மீது தமிழக அரசு, காவல் துறை நடவடிக்கை எடுத்திட வேண்டும்… என்று இந்து மக்கள் கட்சி தமிழகம் கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் இராம ரவிக்குமார் நம்மிடம் தெரிவித்தவை….

உடுமலைப்பேட்டை கொமரலிங்கம் என்கிற ஊரை சேர்ந்த சங்கர் .

இவர் சமூக செயற்பாட்டாளர், பெண்ணுரிமைப் போராளி, பெரியாரின் பேத்தி என மேடைகளில் முழங்கி,

இன்று பாதிக்கப்பட்ட பல பெண்கள் இருந்தாலும், திருநங்கைகள் இருந்தாலும் அவர்களைப் பற்றியெல்லாம் எனக்கு கவலை கிடையாது எனக்கு சக்தி தான் முக்கியம் என்று தத்துவம் பேசக்கூடிய ஒரு பெண்ணாக கௌசல்யா என்கின்ற குமரலிங்கம் சங்கரின் முன்னாள் மனைவி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

(இந்த பதிவில் இருக்கக்கூடிய படங்கள் அனைத்தும் உடுமலைப்பேட்டை கொமரலிங்கம் என்கிற ஊரை சேர்ந்த சங்கர் படுகொலை செய்யப்பட்ட அடுத்த தினம் அவருடைய கிராமத்திற்கு இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழ் திரு அர்ஜுன் சம்பத் அவருடைய அறிவுரையின்படி நான் மற்றும் என்னோடு திருமுருகனார் பழனி சேகர் ஹரி மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் சென்று குமரலிங்கம் சங்கர் புதைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தி அவர்களை சென்று பாட்டி அவருடைய தகப்பனார் பாட்டி மற்றும் குடும்பத்தாரிடம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அதுமட்டுமல்லாது அவருடைய குடும்பத்தாருக்கு பாதுகாப்பும் வேண்டும் இழப்பீடும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்)

இதை இந்த நேரத்தில் நான் சொல்ல வேண்டிய காரணம் சங்கர் இல்லை என்றாலும் அவருடைய நினைவாகவே வாழ்வேன் என்று சொன்ன கௌசல்யா என்ற பெண்ணுக்கு சில கேள்விகளை முன்வைக்கிறோம்.

  1. சாதி மறுப்பு திருமணம் செய்து அதனால் படுகொலை செய்யப்பட்ட சங்கர் படுகொலை கடுமையான கண்டனத்துக்குரியது. அந்த படுகொலையின் காரணமாக கிடைக்கப்பட்ட அரசாங்கத்தின் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வழங்கிய உதவிகள் அரசாங்கம் கொடுத்த அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றை சுயமரியாதை உள்ள ஒரு பெண்ணாக இருந்தால் சங்கரால் கிடைக்கப்பெற்ற இந்த அரசு பணி எனக்கு தேவையில்லை சக்தியோடு நான் பறையடித்து பிழைத்துக் கொள்கிறேன் என்று சொல்லத் தயாரா?
  2. சங்கர் படுகொலைக்குப் பிறகு
    கணவன் பெயரை வசூல் செய்வதற்காக ஒரு அறக்கட்டளை என்று ஏற்படுத்தி சமூக மாற்றம் செய்கிறேன் என்று ஊரெல்லாம் வாய்கிழிய பேசக்கூடிய கௌசல்யா வரவு செலவுகளை பொதுவெளியில் வெளியிட தயாராக இருக்கிறாரா?
  3. ஈவேரா சிலை முன்பாக பறையடித்து புரட்சித் திருமணம் செய்ததாக ஊரெல்லாம் பொய்யும் புரட்டும் பேசக்கூடிய கௌசல்யா சக்தி எந்த சமூகத்தை சார்ந்தவர் ?
    இதில் எங்கே புரட்சி வந்து விட் டது பல பெண்களை ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டு திராவிடகட்டப்பஞ்சாயத்து நீதிபதிகளால் அபராதம் விதிக்கப்பட்ட ஆருயிர் கணவன் அல்லவா உன்னுடைய சக்தி?
  4. திரு தியாகு அவர்களும்,
    கொளத்தூர் மணி அவர்கள்
    சக்தி என்கின்ற நபரால் பாதிக்கப்பட்ட பெண்களிடமும் ,திருநங்கைகளிடம் விசாரணை செய்து அபராதம் விதித்து,
    தனிநீதிமன்றம் போலவும்,
    இவர்கள் நீதிபதிகள் போலவும் தீர்ப்பு கொடுத்து
    தமிழக கட்டப்பஞ்சாயத்து வரலாற்றில் “திராவிட கட்டப்பஞ்சாயத்து நீதிபதிகள்” வழங்கிய தீர்ப்பு பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி இருக்கிறது. நியாயமாக அனைத்து விஷயங்களுமே சக்தி என்கின்ற உனக்கு தெரியும் அப்படி இருந்தும் நீ பெண்களுக்காக பேசுகிறேன் சாதி ஆணவ படுகொலைக்கு எதிராக பேசுகிறேன் என்றெல்லாம் மேடை எல்லாம் வாய்கிழிய பேசக்கூடிய பெரியாரின் பேத்தி பாதிக்கப்பட்ட பெண் பேசியபோது பதில் எதுவும் பேசாமல் தியாகு தோழரிடம் பேசு என கெளசல்யா பேசியது ஆதிக்க மனப்பான்மை இல்லையா?
  5. சக்தி கௌசல்யா திருமணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்த திமுக தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் உள்ளிட்ட வாழ்த்து தெரிவித்த அனைத்து தலைவர்களும்
    “சக்தியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு திருநங்கைகளுக்கு ஆதரவாக நீதி வேண்டும் நியாயம் வேண்டும் “
    என்று ஒற்றை வார்த்தை கூடபேசாது இருப்பது ஏன்? இந்த திராவிட கட்டப்பஞ்சாயத்து நீதிபதிகளின் தீர்ப்பை ஆதரிக்கிறார்களா ?

அப்படியானால் நீதி கிடைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாட கூடிய நிலைமை இந்த நாட்டுக்கு தேவை இல்லை என்று சொல்லுகிறார்களா?

மகிழ்ச்சி தெரிவித்த மாபெரும் தலைவர்கள் எல்லாம் மௌனம் சாதிப்பதை என்னவென்று சொல்வது?

  1. சுயமரியாதை உள்ள பெண்மணியாக கௌசல்யா இருப்பாரேயானால் சங்கரின் உயிர் தியாகத்தால் பெற்ற அரசுப் பணியை மற்றும் அவரால் கிடைக்கப்பெற்ற அரசு நலத்திட்டங்களை திரும்ப கொடுக்க தயாரா?
  2. தாமரை என்கின்ற ஒரு பெண்கவிஞர் பாதிக்கப்பட்டு எந்த நீதியும் கிடைக்கப்பெறாமல் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்தது யாரால் பாதிப்பு?
    என்பது இந்த தமிழ் சமூகத்திற்கு தெரியும் ?
    அப்படி இருந்தும் தன்னுடைய பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளாத “தியாக சீலர் “
    கௌசல்யா கட்டப்பஞ்சாயத்தில் தீர்ப்புக் கூறியது தான் விந்தையிலும் விந்தை . இதைத்தான் நீதிதேவன் மயக்கம் என்பதோ .
  3. தமிழக அரசு காவல்துறை இந்த திராவிட கட்டப்பஞ்சாயத்து நீதிபதிகள் கொளத்தூர் மணி தியாகு ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுத்திட இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் சார்பில் விரைவில் புகார் மனுவை சமர்ப்பிப்போம்.

இதே திராவிட கட்டபஞ்சாயத்து நீதிமன்றத்தில்

நாளை கௌசல்யா அவருடைய வழக்கு கூட வரலாம் . அதற்கும் இவர்கள் தவணை முறையில் பணம் கட்டச் சொல்லி சக்திக்கு ஆதரவாக தீர்ப்பு சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

“வாழ்க திராவிட நீதிபதிகள்
வாழ்க திராவிட கட்டப்பஞ்சாயத்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe