தமிழக தண்ணீரை தமிழகத்துக்கே தரவிடாமல் தடுப்பவர்கள், கர்நாடகத்திடம் எப்படி கேட்க முடியும்?!

தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்

rajendra balaji admk minister - 2026

தமிழகத்து தண்ணீரை தமிழகத்துக்கே தர விட மாட்டோம் என்று தடுப்பவர்கள் எப்படி காவிரி நீர் வேண்டி கர்நாடகத்திடம் கேட்க முடியும்? ஹிந்துக்களை அழிக்க வேண்டும் என்பதுதான் திக தலைவர் வீரமணியின் கொள்கை என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டினார்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, மழை வேண்டி நாங்கள் யாகம் நடத்துகிறோம்! குறை கூறுபவர்கள் குடிநீர் பிரச்சனையை பெரிதாக்கி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்!

தமிழகத்திலுள்ள தண்ணீரையே தமிழகத்துக்குள் எடுத்துவர விடமாட்டோம் என்று தடுத்து வருகின்றனர்! இவர்களால் எப்படி கர்நாடக தண்ணீரை கேட்க முடியும்? சென்னை மக்கள் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட வேண்டும் என்று அவர்களே செயல்படுகின்றனர்!

எங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது; மக்கள் நலமாக இருக்க வேண்டும் என யாகம் நடத்துகிறோம்! திக தலைவர் வீரமணி போன்றவர்களுக்கு எங்களை கிண்டல் அடிப்பதும் கேலி பேசுவதுமே வாடிக்கையாகிவிட்டது!

திக.,வுக்கு என்ன கொள்கை இருக்கிறது? வீரமணிக்கு என்ன கொள்கை இருக்கிறது? இருக்கும் ஒரே கொள்கை, ஹிந்துக்களை அழிக்க வேண்டும் என்பதுதான்! அதுதான் திக தலைவர் வீரமணியின் கொள்கை!

அவருக்கு வெளிநாட்டில் இருந்து ஏகத்துக்கும் பணம் வருகிறது! அதற்காக இப்படி அவர் பேசுகிறார்! அவருடைய வாயை வைத்து ஓட்ட வேண்டியதுதான்!

ராஜீவ் குடும்பம் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக மக்கள் அளித்த ஆதரவு தான் திமுக வெற்றிக்குக் காரணம்! தேர்தலில் காங்கிரஸ் திமுகவை சுமந்தது! மற்ற கட்சிகளை வேண்டுமானால் திமுக சுமந்து இருக்கலாம்” என்று கூறினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.