தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களுக்கு உயர்த்தபட்ட சம்பளம் கொடுக்கப்பட்டது. தாங்கள் கொடுத்த கடிதத்தை திமுக., எம்.எல்.ஏ.,க்கள் திரும்பப் பெற்றதால் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னை தீரும் வரை, தி.மு.க., – எம்.எல்.ஏ.,க் களுக்கு, சம்பள உயர்வு வேண்டாம்’ என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து அவைத்தலைவரிடம் கடிதம் கொடுத்திருந்தார்.
இதனால் அவைத்தலைவரிடம் கொடுத்த கடிதத்தை தி.மு.க., – எம்.எல். ஏ.,க்கள் திரும்பப் பெற்றால் மட்டுமே சம்பள உயர்வு என அரசு அறிவித்தது!
இந்நிலையில், உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்கக் கோரி, சட்டசபை செயலரிடம், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கடிதம் அளித்தார். இதையடுத்து அவர்களுக்கு, இந்த மாதம் முதல் உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்கப் படுகிறது. அத்துடன் நிலுவைத் தொகையான ரூ. 6.50 லட்சம் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது!
இந்த வகையில், மு.கருணாநிதிக்கு வழங்கப் பட வேண்டியநிலுவைத் தொகையையும் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அப்படி எனில், சம்பள உயர்வு வேண்டாம் என்று சொன்னது மக்களை, போக்குவரத்துத் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்குத்தானா என்று சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் பொங்கித் தீர்த்துள்ளனர்.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை சம்பள உயர்வு வேண்டாம் என்று சொன்னீர்களே…. அப்படி எனில், இப்போது எல்லா போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சினையும் தீர்வு கண்டு முடிவாகிவிட்டதா? எல்லாருக்கும் அவர்களின் பிஎஃப், ரிடையர்மெண்ட் பெனிஃபிட், நிலுவைத் தொகை எல்லாம் கிடைத்து விட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர் சமூக ஆர்வலர்கள்!
எடப்பாடி பழனிச்சாமி அரசு தி.மு.க.வுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது உண்மை தான்! அவர்களே போட்ட வழக்குகளை அவர்களே வாபஸ் பெறுகிறார்கள், கொடுத்த கடிதத்தை அவர்களே திரும்பப் பெறுகிறார்கள் என்று கலாய்க்கின்றனர் நெட்டிசன்ஸ்!




