வாட்ஸ்அப் புதிய அம்சம் ஐபோனில்..!

whatsapp - 2026

மெட்டாவுக்கு (பழைய பெயர் பேஸ்புக்) சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்பாரம் ஆன வாட்ஸ்அப் ஒருவழியாக அதன் ஐபோன் பயனர்களுக்கு, வாய்ஸ் நோட்ஸ் ரெக்கார்டிங்கின் போது ‘ பாஸ் ‘ மற்றும் ‘ ரெஸ்யூம் ‘ (pause and resume) செய்யும் ஆதரவை கொண்டு வந்துள்ளது.

குறிப்பிட்ட அம்சம் சில காலமாக பீட்டாவில் (பொது தளத்திற்கு வரும் முன் எல்லாம் சரியாக உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டும் தளம்) இருந்தது.

இன்னும் சொல்லப்போனால் இந்த அம்சம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சோதனை செய்யப்பட்டு, இறுதியாக தற்போது தான் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் அதன் செயலியில், ஆண்ட்ராய்டு போனிலிருந்து ஐபோனுக்கு சாட்களை டிரான்ஸ்பர் செய்யும் திறன், இன்-ஆப் கஸ்டமர் சர்வீஸ் சாட் உட்பட பல புதிய அம்சங்களை கொண்டு வருவதன் ஒரு பகுதியாக ஐபோன் பயனர்களுக்கான வாய்ஸ் ரெக்கார்டிங் அப்டேட்டையும் கொண்டு வந்துள்ளது என்பதில் சந்தேகம் வேண்டாம்.

ஐஓஎஸ் பயனர்களுக்கான இந்த அப்டேட் வழியாக, பயனர்கள் வாய்ஸ் நோட்டிற்காக அவர்கள் எதைப் பதிவு செய்தாலும் அதை இடைநிறுத்தி அவர்கள் அனுப்பும் முன் அதைக் கேட்கவும் அனுமதிக்கிறது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

எனவே பயனர்கள் தாங்கள் அனுப்ப முயற்சிக்கும் வாய்ஸ் மெசேஜை நீட்டிக்க விரும்பினால், தங்கள் குரல் பதிவை மீண்டும் தொடரலாம்.

இந்த புதிய அம்சம் ஐஓஎஸ்-க்கான வாட்ஸ்அப் வெர்ஷன் 22.7.75 உடன் வருகிறது. இந்த லேட்டஸ்ட் அப்டேட் பற்றிய ஆப் ஸ்டோர் விளக்கத்தின்படி, “நீங்கள் இப்போது வாய்ஸ் மெசேஜ்களை பதிவுசெய்யும்போது, இடைநிறுத்தி அதை மீண்டும் தொடங்கலாம்.

ரெக்கார்டிங்கை லாக் செய்ய மேல் நோக்கி ஸ்வைப் செய்யவும். பின்னர் தேவைக்கு ஏற்ப “பாஸ்” மற்றும் “ரெஸ்யூம்” பட்டன்களை பயன்படுத்திக் கொள்ளவும்”.

இந்த புதிய அம்சத்தை முயற்சிக்க, பயனர்கள் தங்கள் வாய்ஸ் ரெக்கார்டிங்கை ஸ்வைப் செய்து லாக் செய்ய வேண்டும், பின்னர் புதிய ‘பாஸ்’ மற்றும் ‘பிளே’ பட்டன்கள் அணுக கிடைக்கும். அதில் தேவைக்கு ஏற்ப புதிய அம்சங்களைச் சோதிக்கலாம்.

இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எப்போது அணுக கிடைக்கும் என்கிற எந்த தகவலும் கிடையாது. ஆனால் வரும் சில நாட்களில் இது அறிமுகம் செய்யப்படலாம் என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

வாட்ஸ்அப் நிறுவனம் அதன் ஐபோன் பயனர்களுக்கான ஃபோகஸ் மோட்-ஐயும் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் வாட்ஸ்அப் நோட்டிஃபிக்கேஷன்களின் மீது செயல்படும்.

அதாவது பயனர்கள் ஃபோகஸ் மோட்-ஐ இயக்கியிருந்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட வாட்ஸ்அப் தொடர்புகளில் இருந்து வரும் மெசேஜ்களை மட்டுமே பெறுவார்கள்.

இது தவிர வாட்ஸ்அப் நிறுவனம், பயனர்கள் தங்கள் சாட்களை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிலிருந்து புதிய ஐபோனுக்கு இம்போர்ட் செய்ய அனுமதிக்கும் அம்சத்திலும் செயல்பட்டு வருகிறது.

தற்போது வரை, ​புதிதாக ஐபோன் வாங்கிய பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் சாட்களை ஆண்ட்ராய்டு போனில் இருந்து ஐபோனுக்கு மாற்றுவதற்கு எந்த வழியும் இல்லை.

இருப்பினும், கடந்த ஆண்டு சில சாம்சங் மற்றும் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் இருந்து ஐபோனுக்கு சாட்களை நகர்த்தும் திறனை வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளதால், இந்த அம்சம் கூடிய விரைவில் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் அணுக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories