பின்னடைவைச் சந்தித்துள்ள ஏர்டெல், வோடபோன் ஐடியா..!

தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல் வணிகம்

idea airtel vodafone jio - 2026

ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய இரு நிறுவனங்களும் மார்ச் மாத கணக்கின்படி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை இழந்துள்ளன என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் தெரிவித்துள்ளது.

இது குறித்து டிராய் வெளியிட்டுள்ள தகவலில், ஏர்டெல் நிறுவனம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. அந்த நிறுவனம், ஒரு கோடியே 45 லட்சம் வாடிக்கையாளர்களை மார்ச் மாத காலகட்டத்தில் இழந்துள்ளது. இது மாபெரும் இழப்பு

வோடபோன் ஐடியா நிறுவனமும் சுமார் ஒன்றரை கோடி வாடிக்கையாளர்களை இந்தக் காலக்கட்டத்தில் இழந்துள்ளது. இதுவும் இந்த நிறுவனத்துக்கு பெரும் இழப்புதான்.

இருப்பினும், இதே காலகட்டத்தில் ஜியோ நிறுவனம் சுமார் ஒரு கோடி புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. ஜியோவைத் தவிர பெரும்பாலான நிறுவனங்கள் மார்ச் நிறைவு கணக்கீட்டில் பெரும் சரிவையே சந்தித்துள்ளன… என்று கூறப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.