இந்தியாவில் இருந்து வெளியேறும் சோனி! புதிய மொபைல்ஸ் வெளியீடு இல்லை!

தொழில்நுட்பம் வணிகம்

camera company trade yokohama sony cooperation - 2026

இந்திய செல்போன் சந்தையில் இனி சோனி மொபைல்ஸ் எதுவும் புதிதாக வெளியிடாது. அதே நேரம், பழைய போன்களுக்கான சாப்ட்வேர் அப்டேட்ஸ் மற்றும் விற்பனை தொடர்பான உதவிகள் தொடர்ந்து வழங்கப் படும் என்று கூறியுள்ளது அந்நிறுவனம்.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் செல்போன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் சோனி நிறுவனம், லாபம் ஈட்டாத தென் அமெரிக்கா, தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தங்களது கவனத்தை குறைத்துக் கொள்ளப் போவதாகவும், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் புதிய செல்போன் வர்த்தகத்தை நிறுத்தப் போவதாகவும் கூறியுள்ளது.

எங்களது கவனம், ஜப்பான், ஐரோப்பிய, ஹாங்காங், தைவான் சந்தைகளை நோக்கியே இருக்கும். அடுத்து வரும் 5ஜி தலைமுறை தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தவுள்ளோம். மத்திய மற்றும் தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், தெற்கு ஆசியா, ஓசியானா உள்ளிட்ட நாடுகளில் வர்த்தகத்தை நிறுத்திக் கொள்ளப் போகிறோம். இருப்பினும் சந்தை நிலவரத்தை கவனித்துக் கொண்டிருப்போம். சந்தை வணிகத்துக்கு சாதகமாக இருந்தால் அடுத்து யோசிப்போம் என்று கூறியுள்ளது.

ஜப்பானில் நடந்த நிறுவன சந்திப்பு நிகழ்வு ஒன்றில் வர்த்தகம் குறித்து சோனி நிறுவனம் தெரிவித்துள்ள போது, 2020ஆண்டு நிதியாண்டில் ஒட்டுமொத்த செலவுகளை 57 சதவிகிதமாக குறைக்கவுள்ளதாக கூறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.