கண்ணனும் கரோனாவும்:
தொட்டுப் பேசாதே
எச்சில் பண்ணாதே
கண்ட இடத்தில் துப்பாதே
மேல படாதே
வாசலோட பேசி அனுப்பு
வெளில சாப்பிடாதே
கண்டதையும் தின்னாதே
இவை எல்லாம் அந்தணர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு சிறுவயது முதலே கூறும் அறிவுரைகள்! ஆனால் இந்த அறிவுரைகள் எல்லாம் இதே சமூகத்தால் விமர்சிக்கப் பட்டு, இவை சமூக சமத்துவத்தை குலைப்பதாக பிரசாரம் செய்தார்கள்.
இன்று காரோனாவால் இந்த அறிவுரைகளை உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. உடல் ரீதியான சமத்துவம் பேசிக் கொண்டிருந்த மேலை நாடுகள் இன்று ஏமாற்றத்தால் துவண்டு போயுள்ளன.
வித்யா வினய ஸம்பன்னே ப்ராம்மணே கவி ஹஸ்தினி, சுனிஷ்ச்சைவ ஸ்வபாகேச பண்டிதாஹா ஸம தர்சினஹா” என்றான் கண்ணன். கற்றறிந்த அந்தணன், பசு, யானை, நாய் மற்றும் அந்த நாயையும் உண்பவன் என்றிருக்கும் இவர்கள் அனைத்து பேரையும் பண்டிதர்கள் (ஞானிகள்) சமமாகப் பார்ப்பார்கள் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.
ஆக பண்டிதர்கள் உடலைத் தாண்டி ஆத்ம சமத்துவம் பாராட்டக் கூடியவர்கள். அனைத்து ஆத்மாக்களும் இறைவனை தன்னகத்தே கொண்டவை என்று பார்ப்பவர்கள். இதனால் உடலைத் தாண்டிய சமத்துவம் பேசினான் கீதையில் கண்ணன்.
கண்ணன் மற்றொரு விஷயத்தையும் கீதையில் சொன்னான்: “சாதுர்வர்ண்யாம் மாயா ஸ்ருஷ்டம்” என்றான். அதாவது “நான்கு வர்ணங்களும் என் படைப்புகள்” என்றான். இந்த வர்ணாஸ்ரம தர்மம் என்பது உடல் ரீதியான ஒன்று. அந்த சுலோகத்தில் உள்ளத்து ரீதியான சமத்துவத்தினைக் காண்பது குறித்துப் பேசிய கண்ணன், இந்த சுலோகத்தில் உடல் ரீதியான பாகுபாட்டை விவரிக்கிறான்.
ஓர் இனத்துக்குள்ளே பாகுபாடுகள் பல இருக்கும். யானை எனின், இந்திய யானை, ஆப்ரிகா யானை போன்று பல வகைகள் உண்டு. இப்படி மனித இனத்துக்கான உடல் ரீதியான பாகுபாடுதான் வர்ணாச்ரமத்தில் கூறப் படுவது. இதற்கும் தீண்டாமைக்கும் தொடர்பு இல்லை. இது உலக இயற்கை.
நமது சுய லாபத்துக்காகவும், சிறிது கால சந்தோஷத்துக்காகவும் நாம் இந்த இயற்கையை மீறி பல கலப்புக்களிலும், பல செயல்களிலும் ஈடுபடுகிறோம். ஆங்கிலத்தில் “Cross breed” என்பார்கள். இது மனிதன் துவங்கி தாவரம் வரை நடக்கிறது. ஒட்டு மாங்காய் என்பதை நாம் விரும்பி உண்போம். இது சுவையாய் இருக்கலாம் ஆயினும் உடலுக்கு நன்மை பயக்குமா என்றால் கேள்விக்குறி தான்.
இதுபோல் பல உள்ளன. சுகத்துக்காகவும் சுவைக்காகவும் நாம் பல இயற்கையை மீறும் செயலில் ஈடுபட்டு வருகிறோம். இதை உணர்ந்த சிலரின் முயற்சியே organic உணவுகள். மர செக்கு எண்ணெய், பூச்சி மருந்தில்லா காய்கறி என்று அந்த நாட்களில் இருந்த பலவற்றை நாம் மீளவும் கொண்டு வருகிறோம்.
Inorganic என்று கூறப்படும் hybrid வகைகள் கலப்பு மற்றும் இயற்கைக்கு எதிரான ரசாயன சேர்க்கையால் பெற்ற பொருட்கள். இவை சுவையும் சுகமும் தரலாம்! ஆனால் இவை நன்மை பயக்காது.
அதுபோல் இயற்கைக்கு எதிரான மனிதக் கலப்புக்கள் சுகமளிக்கலாம் ஆனால் நன்மை பயக்காது. இனிமை அனைத்தும் நன்மை தராது! நன்மை அனைத்தும் இனிமையாக இருக்காது. ஆயினும் நன்மை பயப்பதே நிலையானது. இனிமை என்றும் நிலைக்காது.
கண்ணன் சொன்ன இயற்கையை மீறியதால் வந்த விளைவே கரோனா. கண்ணனே கரோனாவை ஒழிக்க வேண்டும்!
- ஸ்ரீவல்லபன் தேவராஜன்