கடைவிரித்தும் கொள்வாரில்லை…!

Published:

iruttu kadai halwa - 2026

யாரும் எப்போதும் புகழின் உச்சத்தில் நிலைத்திருப்ப தில்லை. இந்த கொராணா அனைவருக்கும் பல பாடத்தை கற்று தந்தது, தருகிறது.

அதில் ஒன்று நான் கண்ட இந்த புகைப்படம்! இந்த கடை மாலை 6 மணிக்கு திறப்பதற்கு முன்பே 60 பேர் கடை வாசலில் தினமும் காத்திருப்பர். கடை திறந்தது முதல் அடைக்கும் வரை வாசலில் கூட்டம் குவிந்திருக்கும்.

பல நேரங்களில் இங்கு அல்வா வாங்க நானே உரிமையாளரிடம் பலருக்காக தொலைபேசியில் பரிந்துரை செய்து வாங்கி கொடுத்துள்ளேன்.

இருட்டுக்கடை லாலாவின் மரணம் பலருக்கு அதிர்ச்சி. பணத்திற்கோ புகழுக்கோ நட்புக்கோ குறைவில்லா மனிதர்! அவர் மறைந்தார். கொரோணா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பின் இப்போது மீண்டும் கடை விரித்தும் கொள்வாரில்லை என்ற நிலை.

இந்த நிலை ஏற்படும் என்பதை யாரும் கனவில் கூட நினைத்திருக்க இயலாது! வாழ்க்கையில் எந்த உச்சமும் நிரந்தரமில்லை. இன்று நாம் இந்த நிலையில் இருக்கிறோம். நட்புகள் சொந்தங்கள் பெயர் புகழ் இருக்கிறது. ஆனால் இது எதுவுமே நிரந்தரமில்லை.

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

நமக்கும் மேலே ஒருவனடா அவன் நாலும் அறிந்த தலைவனடா! யாரை எப்போது ஏற்றுவது எப்போது இறக்குவது என்பதை அறிந்தவன் இறைவன் மட்டுமே! உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்

நெல்லை மண்ணின் புகழின் ஒரு அங்கமாய் விளங்கிய இருட்டு கடை மீண்டும் உச்சத்தை தொடட்டும்! உச்சமோ வீழ்ச்சியோ எதுவாயினும் இறைவன் கையில்!

இதுவும் கடந்து போகும்! கொரோனா கற்று தந்த பாடம்!

  • கா.குற்றாலநாதன், நெல்லை

Related articles

Recent articles

spot_img