சங்கரன்கோவிலில் இன்று ‘வழக்கமான’ ஆடித்தபசு காட்சி இல்லை!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் தமிழகம் நெல்லை
sankarankoil1 - 2026

தென்காசி: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சங்கரன்கோவிலில் இன்று நடைபெற இருந்த வழக்கமான ஆடித் தபசு காட்சி நடைபெறவில்லை. ஆயினும் பூஜை வழிபாடுகள் நடைபெறுகின்றன.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நயினார் கோவிலில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொடியேற்றம் முதலான ஆடித் தபசு திருவிழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

sankarankoil2 - 2026

இந்நிலையில் வழக்கம்போல் அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் சிறப்பு நிகழ்ச்சிகளாக மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இந்த ஆண்டு கொடியேற்றம் நிகழ்வு நடைபெறாத நிலையில் இன்று சிறப்பு நிகழ்ச்சியான தபசுக் காட்சி நடைபெறாது.

இதே போன்று தென்காசி மேல சங்கரன்கோவில் மற்றும் கீழ சங்கரன்கோவிலில் தபசு காட்சி இந்த ஆண்டு நடைபெற வில்லை. வழக்கம்போல் உள்ள சிறப்பு பூஜை வழிபாடுகள் மட்டுமே நடைபெறுகின்றன.

ஆண்டுதோறும் இடைவிடாமல் நடந்து வந்த நிகழ்வு, நடைபெற இயலாத சூழலை அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர்.

சங்கரன்கோயில் அம்பிகையின் ஆடித்தபசுக் காட்சி… (கடந்த வருடம் எடுத்த படம்…)

sankarankoil adithapasu - 2026

சங்கரன்கோயில் படங்கள்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.