
- மு. ராம்குமார்
வாணவேடிக்கை, மத்தாப்பு, சங்கு சக்கரம் போன்றவை அனைத்து வயதினருக்கும் மகிழ்வூட்டக் கூடியவை. வாணவேடிக்கைக்கு அடிப்படையே பல வண்ண வர்ண ஜாலங்களும், திடுமென்ற சத்தங்களும் தான். இவற்றுக்கான மூலப் பொருட்கள் பலவித பாறைகளும், கனிமங்களுமே. அவற்றில் சிலவற்றைத் தெரிந்து கொள்வோம்….

பாக்சைட்: அலுமினியத்தாது. இந்தத் தாது பவுடர் தான் பளீரென்ற வெளிச்சத்தையும், சத்தத்தையும் கொடுக்கிறது.
நைட்ரனைட் : சோடியம் நைட்ரேட் என்ற வேதிப் பொருளாலானது, மத்தாப்பு, வெடி, ஆகியவற்றில் ஆக்ஸிஜனேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.

செலஸ்டைட், செலஸ்டின்: வாணவேடிக்கை, மத்தாப்புகளில் சிவப்பு நிறத்திற்காக சேர்க்கப்படும் தாது உப்பு.
நைட்டர்: பொட்டாசியம் நைட்ரேட் என்ற இந்த தாது உப்பு கரித் தூளுடனும், கந்தகத்துடன் கலக்கப்பட்டு ராக்கெட் வெடியை உயரத்திற்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகிறது.

பேரைட்: பேரியம் என்ற உலோகத் தாது. வாணவேடிக்கையில் பச்சை நிறத்தை உண்டு பண்ண பயன்படுத்தப்படுகிறது.
டோல்பேகைட்: காப்பர் குளோரைட் தாது. பச்சை வண்ணத்திற்காக வாணவேடிக்கையில் உபயோகப்படுத்தப்படுகிறது.

ஜிப்ஸம்: கால்ஸியம் ஸல்பேட் கனிமம். வாணவேடிக்கைகளில் ஆக்ஸிஜனேற்றியாகவும், ஆரஞ்சு வண்ணத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.