சென்னை: ரஜினி படத்தில் நடிப்பதற்காக த்ரிஷா தனது தலைமுடியை நறுக்கிக் கொண்டிருக்கிறார். அட.. இதுதான் இப்போது ஹாட் நியூஸ், டாப் நியூஸ் எல்லாம்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படத்தில் நடிக்கிறார் பியூட்டி குயின் த்ரிஷா க்ருஷ். அந்த வகையில் திரிஷாவின் நீண்ட நாள் கனவு இப்போது நிறைவேறியுள்ளது.
இந்தப் படத்தில் த்ரிஷா நடிக்கும் பகுதி சென்னையில் படப்பிடிப்பாகிறது. த்ரிஷா இந்தப் படத்துக்காக, தான் அழகாக ஆசையாக வளர்த்து வந்த தலைமுடியை நறுக்-கியுள்ளார். அவருடைய புதிய ஹேர் ஸ்டைலை பார்க்கும் போது மிக கூலான ஒரு கதாப்பாத்திரத்தில் நடிப்பதுபோல் தெரிகிறது. குட்டையான பிரௌனி ஹேர் ஸ்டைலைப் பார்க்கும் போது திரிஷா இப்போதுதான் நடிக்க வந்தவர் போல் அந்த 16 வயதினிலே தெரிகிறது…!




