எஸ்.வி.சேகர் தொடங்குகிறார் ‘குடும்ப அரசியல்’ வார இதழ்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை துணுக்குகள்
chozhi weekly horz - 2026

நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்வி சேகர் ஒரு வார இதழை தொடங்கப் போகிறார் என்றும், அதில் துக்ளக் ஆசிரியர் சோ பெயரையும் பொதிந்து வைத்துள்ளார் என்றும் ஒரு தகவல் வந்தது. இந்த வார இதழ் குறித்த அறிவிப்பு ஓர் இணையதளத்தில் வெளியான போது அதை தன் முகநூலில் பகிர்ந்திருந்தார் எஸ்வி சேகர்.

இதனால் அவர் இப்படி ஒரு வார இதழை தொடங்குகிறார் என்பது உறுதியானது. அதில் சோ .,வின் துக்ளக் பாணியில் கழுதைகள் இரண்டு பேசிக் கொண்டிருப்பது போல் கார்ட்டூன் போட்டு, இனி நமக்கு நல்ல தீனி என்று சொல்வது போல் கருத்துகள் இருந்தன. மேலும் இன்னொரு கருத்துப் படத்தில் இரு குடும்பங்களைப் பத்திப் பேச ஒரு வாரப் பத்திரிகையா என்ற கேள்வியுடன் முகப்பு அட்டை இருந்தது.

இந்நிலையில், தாம் இதழ் தொடங்கப் போவது உண்மை என்றும், தாம் மட்டுமே குடும்ப அரசியல் செய்யப் போவதாகவும், தற்போதைய துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்திக்கு இதில் தொடர்பில்லை என்றும் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார் எஸ்.வி.சேகர். ஆகவே எஸ்வி சேகரிடம் இருந்து நடுநிலை இல்லாத நேர்மையான அரசியலை இனி எதிர்பார்க்கலாம்!

இது குறித்து எஸ்வி சேகர் குறிப்பிட்டிருப்பது… “நானும் திரு குருமூர்த்திஅவர்களும் சேர்ந்து சோழி வார இதழ் ஆரம்பிப்பதாக வந்த தகவல்(Asianet)100% திரிக்கப்பட்ட பொய் தகவலே. என் மானசீக குரு திரு.சோ win வழியில் மட்டுமே “சோழி”குடும்ப அரசியல் வார இதழாக விரைவில் “நடுநிலை இல்லாத நேர்மையான அரசியல் தேச நலன் கூடிய பத்திரிகையாக வெளிவரும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.