குற்றாலம் அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்

Published:

IMG 20190720 WA0007 - 2026

குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி நீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள திருக்குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது கடந்த இரு நாள்களாக குற்றாலம் மலைப்பகுதியில் மழை பெய்ததையடுத்து அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது

கடந்த சில நாள்களாக இதமான சூழல் நிலவுவதாலும் சாரல் காற்று மனதுக்கு இதம் அளிக்கும் வகையில் இருப்பதாலும் சுற்றுலா பயணிகள் பெரும் அளவில் வருகை தருகின்றனர் இன்று சனிக்கிழமை மற்றும் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது

இருப்பினும் அருவிகளில் நீர் பெருக்கு அதிகரித்து வெள்ள நிலை ஏற்படும்போது போலீசார் குளிப்பதற்கு தடை விதித்து பின்னர் நீர் வரத்து சரியானதும் குளிப்பதற்கு அனுமதிக்கின்றனர்

Related articles

Recent articles

spot_img