செங்கோட்டை சிருங்கேரி மடத்தில் 10 நாள் சம்ஸ்கிருத பயிற்சி முகாம்!

வீடியோ

செங்கோட்டை சிருங்கேரி மடத்தின் கிளையும் ஸ்ரீ பாரதீ தீர்த்த வேதபாடசாலையும் இணைந்து சம்ஸ்கிருத பாரதி அமைப்பினர் நடத்தும் பத்து நாள் சம்ஸ்கிருத பேச்சு பயிற்சி முகாம் நடத்தப் பட்டது.

திருநெல்வேலியைச் சேர்ந்த திருமதி ராஜம் இந்தப் பத்து தினங்களும் சம்ஸ்கிருத அடிப்படைப் பயிற்சி அளித்தார். எழுத்துகள், இயல்பான பேச்சு வழக்கு இவற்றை பயிற்றுவித்தார்.

இந்தப் பயிற்சி முகாமில் செங்கோட்டை வாழ் அன்பர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

இந்த சம்ஸ்கிருத சிபிரத்தின் நிறைவு நாளில், சிறப்பு பூஜை, பாடல்கள், சம்ஸ்கிருதத்திலேயே உரையாடிய நாடகம் ஆகியவை நடைபெற்றன. நிறைவாக முகாம் ஏற்பாட்டாளர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கும் நன்றி கூறப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.