ஐ.என்.எஸ்., துணைத் தலைவராக தினமலர் வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம்: பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
pon radhakrishnan - 2026

இந்திய செய்தித்தாள் நிறுவனம் – ஐ.என்.எஸ்ஸின் துணைத் தலைவராக ‘தினமலர்’ கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அவருக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன் தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்…. இந்திய செய்தித்தாள் நிறுவனம் (INS) அமைப்பின் துணைத்தலைவராக @dinamalarweb தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் ஆதிமூலம் நியமிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இப்பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு பத்திரிகை உலகில் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

நிர்வாக குழு உறுப்பினர்களாக தேர்வு பெற்றுள்ள மூத்த பத்திரிக்கை வெளியீட்டாளர் தினமலர் டாக்டர்.லட்சுமிபதி மற்றும் தினத்தந்தி நிர்வாக இயக்குநர் திரு.பாலசுப்ரமணியம் ஆதித்தன் ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்… என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.