அருவிக்கிடையே பயணம்! அழகை கொட்டும் இயற்கை! எங்கே தெரியுமா?

Published:

beauty

குறுகிய சாலை அதன் இடையே சிறிய அருவி என காண்போரை வியக்கவைக்கும் சாலையில் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயற்கை எழுல் கொஞ்சும் இடங்களுக்கு செல்ல பலர் மிகவும் விருப்பப்படுவர். தற்போது ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளதால் எங்கும் செல்ல முடியாத காரணத்தினால் வீடியோ மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களையோ அல்லது சென்றுவந்த இடங்களையோ பட்டியலிட்டுக் கொண்டிருக்கின்றனர் சமூகவலை தளவாசிகள்.

அந் தவகையில், உள்நாட்டு வருவாய் சேவை அதிகாரி அங்கூர் ரப்ரியா என்பவர் கடந்த ஆண்டு தாம் சென்று வந்த இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மலை பகுதியில் இருக்கும் குறுகிய சாலையில், இடையில் சிறிய அருவி ஒன்று இருப்பதும் அதனை கடந்து செல்லும்போது சுற்றிலும் வெண்பனி படர்ந்திருப்பது போன்று உள்ளது அந்த இடம்.

பார்ப்பதற்கே மிகவும் ரம்மியமாக இருக்கும் அந்த சாலை ஹிமாச்சலப் பிரதேசத்தின் சாம்பா பகுதியில் உள்ள சச் பாஸிற்கு அருகில் உள்ள சாலை என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் போன சமயத்தில் சுமார் 6 மாதங்கள் அந்த சாலையில் பனி படர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது வீடியோவைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்த்துள்ள இணையவாசிகள் ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் அங்கு சென்றுவர வேண்டும் எனவும் வாழ்நாளில் இதுபோன்ற இடத்தை பார்த்ததே இல்லை எனவும் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலரோ, அழகு சூழ்ந்த இதுபோன்ற இடங்கள் ஹிமாச்சலப் பிரதேசத்தில் அதிகமாக இருக்கின்றன எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

Related articles

Recent articles

spot_img